ஸ்ட்ரைக்கை மீறி ஷூட்டிங்கை முடிக்கும் விஜய் சேதுபதி.. ரிலீஸில் பிரச்னையாகுமா?

  • 6 years ago
தமிழ்த் திரையுலகில் கடந்த இரண்டு வாரங்களாக யாரும் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை நடத்தக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. ஆனால், அதையும் மீறி விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் வெளிநாடு சென்றார்கள்.
அவர்கள் மட்டும் வெளிநாடு சென்றதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அது பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமல் இருக்கிறது.
இதனிடையே, போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்ற படக்குழுவினர் அங்கிருந்து அஜர்பைஜான், ஜார்ஜியா என 'மெர்சல்' படப்பிடிப்பு நடந்த நாடுகளுக்கு சென்று அங்கும் படமாக்கியுள்ளனர். இன்னும் ஒரு பாடலையும், சில காட்சிகளையும் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடுமாம்.
இந்தப் படத்தை விஜய்சேதுபதியின் மைத்துனர் ராஜேஷ்தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஏறக்குறைய விஜய்சேதுபதிதான் தயாரிப்பாளர். ஒரு நடிகராகவும் இருந்து கொண்டு மற்ற தயாரிப்பாளர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் விஜய் சேதுபதி படப்பிடிப்பை நடத்தி வருவது, மற்ற தயாரிப்பாளர்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.
சினிமா துறையில் இருப்பவர்களின் வலியை மேடையில் பேசும் விஜய் சேதுபதியே இப்படி இருந்தால் என்ன செய்வது எனவும் முணுமுணுக்கிறார்களாம். விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி கொடுத்ததால் தான் விஜய் சேதுபதி கோபமாக ஷூட்டிங் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
ஷூட்டிங் முடிந்து அவர் திரும்பும்போது இங்கே ஸ்ட்ரைக் முடிந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், 'ஜுங்கா' படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்கலாம். இதனால் விஜய் சேதுபதிக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.


The producer council said that for the last two weeks, no shooting and other activities in the Tamil film industry. However, Vijay Sethupathi's 'Junga' shooting is going on overseas. It has made other producers angry. This is said to be a problem in the release of 'Junga'.

Recommended