தமிழகத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது 'ஏ தாழ்ந்த தமிழகமே!' என்கிற பேரறிஞர் அண்ணாவின் குரல்தான் நினைவுக்கு வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக தத்துவங்கள், தர்க்கங்கள் என சீரும் சிறப்போடும் இருந்த தமிழ் மண் இப்போது இசங்களும் தேவை இல்லை.. தத்துவங்களும் தேவை இல்லை என்ற குரலையும் கேட்க வேண்டிய பரிதாப நிலைக்கு போய் இருக்கிறது.. வலதும் இல்லை இடதும் இல்லை மய்யம் என்கிற குரலாவது பரவாயில்லை.