காவேரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது.

அந்த தீர்ப்பின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் தமிழகத்திற்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

DMK president MK Stalin says his party MLAs are ready to make any sacrifice to protect the interest of the state’s farmers.TN special assembly session today discuss about cauvery issue and in this session special resolution may pass to presuurise centre to form Cauvery management board .

Recommended