விஜயின் சின்ன வயசு புகைப்படத்தை வெளியிட்ட விக்ராந்த்- வீடியோ

  • 6 years ago
விக்ராந்த் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது அவரை அண்ணன் விஜய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அண்ணன் விஜய் போன்று தம்பி விக்ராந்தும் நடிகரானார். அசுர வேகம் இல்லாவிட்டாலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் விக்ராந்த். அவருக்கு விஷால் உள்ளிட்ட நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர். விக்ராந்த் தான் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது அண்ணன்கள் விஜய் மற்றும் இயக்குனர் சஞ்சீவ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விக்ராந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உங்களை கொண்டாட நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எப்பொழுது விஜய் அண்ணாவுடன் சேர்ந்து நடிப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

Actor Vikranth has posted a childhood picture of him on twitter in which actor Vijay is seen carrying 6-months old brother.'

Recommended