விஷ விதைகள்.. புயல் அறுவடை எச் ராஜாவிற்கு வலுக்கும் கண்டனம்

  • 6 years ago
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்தை கூறியதன் மூலம் காற்றை விதைத்து புயலை அறுவடை செய்திருக்கிறார் எதிர்காலத்திலாவது இது போன்ற பண்பாடற்ற, அரசியல் நாகரீகமில்லாத செயல்களில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சர்ச்சை பதிவை போட்டு தமிழகத்தை கலவரமாக்கினார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. எச். ராஜாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எச் ராஜாவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Minister Jayakumar condemns H Raja for his facebook post against Periyar Statue. He also said action will be taken who is creating violence.

Recommended