வாலிபர் அடித்து கொலை திருப்பூரில் பயங்கரம்

  • 6 years ago
திருப்பூரில் தனியார் சாயப்பட்டறையில் வேலைபார்த்த வாலிபரை அடித்து கொலை செய்த விவகாரத்தில் புதைக்கப்பட்ட வாலிபரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.


திருப்பூர் அங்கேரிபாளையம் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில்,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே.நல்லச்சாம்பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் கணேசன் (வயது 35)எஸ்.வி.டையிங் என்கிற சாயப்பட்டறையில் உள்ள கோன் வைண்டிங்கில் பணியாற்றி வந்தார். இவருடன் மதுரையை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.இங்கு வேலை செய்பவர்களுக்கு,சாயப்பட்டறை வளாகத்திலேயே தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கணேசனை காணவில்லை என போலீசாரிடம் புகார்அளிக்கப்பட்டு இருந்தது. புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் மேற்படி சாயப்பட்டறையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த பதிவுகளில், கணேசன், ஆனந்தன் இருவரும்டையிங் நிறுவன மாடிக்கு சென்றதும், ஆனந்தன் மட்டும் இறங்கி வருவதும் கணேசன் மேலே இருந்து வராததும் தெரிய வந்தது. இதையடுத்து புலன் விசாரணை செய்த போலீசார் கணேசன் அடித்துகொல்லப்பட்டு, சாயப்பட்டறை நிறுவனத்திலேயே உள்ள சாம்பல் கொட்டும் குப்பையில் சுமார் 3 அடி ஆழ குழி தோன்டி புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை தொடர்ந்து புதைக்கப்பட்டு இருந்தகணேசனின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் கணேசனுடன் இருந்த ஆனந்தன் குறித்து விசாரித்தனர்.விசாரணையில் ஆனந்தன், ஞாயிறன்று கணேசனுடன் இருந்து விட்டு அதன் பின்னர் ஆனந்தன்தலைமறைவாகி விட்டார். இதனால் ஆனந்தன் தான் கணேசனை அடித்து கொண்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆனந்தனை தேடி வருகிறார்கள்.கணேசனின் பிணத்தை கைப்பற்றிய போலீசார்திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.டையிங்கில் வேலை பார்த்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அனுப்பர் பாளையம் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Police investigated the body of a youth who was buried in a murder case in Tirupur.

Recommended