Skip to playerSkip to main content
  • 8 years ago
இன்று முதல் சினிமா ஸ்ட்ரைக் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவது முழுமையாக நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் கூறுகையில், "க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

The Tamil Films Producers Council has announced that there will be no release of new Tamil movies from March 1st.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended