Skip to playerSkip to main content
  • 8 years ago
விஜய் ஆண்டனி நடிக்க, ஜி.சீனிவாசன் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'அண்ணாதுரை'. படத்திற்கு இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனியே செயல்பட்டிருக்கிறார். தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அண்ணாதுரை இங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறாரா எனப் பார்க்கலாம். விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அண்ணாதுரை'. மீசை இல்லைன்னா இந்திரன்.. மீசை இருந்தா இந்திரன் பாணியில் இங்கே தாடி இருந்தா அண்ணாதுரை, தாடி இல்லைன்னா தம்பிதுரை. கூடுதலாக அண்ணாதுரை கையில் காதலியின் பெயரை பச்சை குத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும், இன்டர்வெல்லுக்குப் பிறகு இருவருமே தாடி வைத்திருப்பார்கள் என்றாலும், இருவரையும் அடையாளம் காண்பதில் பெரிய சிரமம் இருக்காது.
அண்ணாதுரை காதலி தன் கண்முன்னே விபத்தில் சிக்கி இறந்த துக்கத்தில் முழுநேரக் குடிகாரர் ஆனவர். குடிபோதையில், அண்ணாதுரை தெரியாமல் செய்யும் தவறு ஒரு குடும்பத்தையே எப்படி தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது என்பதும் படத்தின் ஒன்லைன்களில் ஒன்று. ஆம், படம் அதை மட்டுமே நோக்கி இல்லாமல் இன்டர்வெல் வரை தரதரவென நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நடக்கிறார்கள்.


Read 'Annadurai' cinema review in Tamil here. 'Annadurai' movie is lead by Vijay antony and directed by G.Srinivasan. In this film, Vijay antony acted in dual role as Annadurai and Thambidurai.
Be the first to comment
Add your comment

Recommended