நாம் வாழும் இந்த சமூகம் நாகரீகமானது தானா?- வீடியோ

  • 6 years ago
மனிதன் விலங்குகளை வேட்டையாட தொடங்கினான் நாகரீகம் பிறந்தது.... விலங்குகள் மனிதமை வேட்டையாட தொடங்கின நாகரீகம் இறந்தது.....

நேற்று கேரளாவில் நடந்த சம்பவத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் துடித்துக்கொண்டிருக்கிறது... கத்திக்கொண்டிருக்கிறது....

முதலில் அங்கு நடந்த சம்பவம் என்ன ?

பசியின் கோரப்பிடியினால் சிக்கவைக்கப்பட்ட ஒருவன் தன் பசி தீர்க்க சிறு உணவு அவனுக்கான உணவை எடுத்தான். ஆம் எடுத்தான் என்றுதான் கூற முடியும். அவனுக்கான உரிமையை அவனுக்கான மறுக்கப்பட்ட உணவு உரிமையை அவன் எடுத்துள்ளான் ஒரு சிறு வேறுபாடு அந்த உரிமை அவனிடம் இருந்து பறித்தது யார் என்ற தெளிவில்லாமல் எடுத்துள்ளான்.

அதை அவன் எடுத்து திருட்டு எனில் அவனுக்கு சேர வேண்டிய அவனுக்கான உரிமையை எடுப்பவர்களை என்னவென்று கூறுவது ?

இங்கே 11 ஆயிரம் கோடி அடுத்தவன் பணத்தை எடுத்துக்கொண்டு ராஜ மரியாதையுடனும் செல்ல முடியும் பல நாள் பட்னியுடன் வழியற்றவனை திருடன் என்று கொல்லவும் முடியும்....

அங்கே இருந்தவர்கள் செல்பீ எடுத்ததனால் தான் அவர்களுக்கு யாருக்கும் மனிதம் இல்லை என்று அனைவரும் கவலை படுகின்றோம்... அவர்களுக்கு மட்டும் தான் மனிதம் இல்லையா ?

அங்கே உங்களின் நாகரீகத்திற்குள் சிக்கிக்கொண்ட அந்த வன குழந்தையை பற்றியோ அதே நாகரீகத்தினால் பறிக்கப்பட்ட அவனுக்கான உரிமையை பற்றியோ இங்கே யாரும் பேச எத்தனிப்பதில்லையே ஏன் ?

இத்தனை வருட காலமும் அவனை பார்க்கவோ அவனுக்காக நினைக்கவோ கூடாத ஒரு நிலையில் தான் நாமும் வைக்கப்பட்டிருந்தோம்.... காரணம் பழங்குடி அவன்.....

பழங்குடியினத்தை சேர்ந்த ஆதிவாசி அவன்.... அவர்கள் அனைவரும் நாகரீகம் அற்றவர்கள் நாடோடிகள்....

அவர்களின் நிலம் பறிக்கப்பட்ட போதும் நாம் மவுனம் காத்தோம்... அவனது உரிமை பிடுங்கப்பட்ட போதும் நாம் மவுனம் காத்தோம் ..... இன்று அவனது உயிர் எடுக்கப்பட்ட போதும் மவுனம் காக்கிறோம் காரணம் அவன் தான் நாகரீகமற்றவன் ஆயிற்றே.....

நாகரீகமுள்ள நாம் துடிக்கிறோம் அவனுக்கான உணவை எடுத்து அவனை திருட வைத்தவனை விட்டுட்டு அவனை திருடன் என்று புடித்தவனை கண்டு துடிக்கின்றோம்.... ஒவ்வொரு நாளும் அவன் உயிர் பல காரணங்களை கூறி நாகரீகமற்ற தீவிரவாதி என்று அவன் இனத்தையே அழித்ததை கடந்து சென்ற நாம் தான் இன்று அவன் செல்பி முன்பு கொல்லப்பட்டதுக்காக ரத்த கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறோம்......

உண்மையில் நாகரிகமும் மனிதமும் இதை தானே உள்ளது ? அப்படியெனில் முன்பு சொன்ன மனிதன் யார் மிருகம் யார் ?

Recommended