Skip to playerSkip to main content
  • 8 years ago

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி கிராம மக்கள் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் சாட் ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended