ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் கலந்து கொள்ளும் இசை திருவிழா

  • 6 years ago
ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, சுஜா வருணி, ரைசா வில்சன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா வரும் 17ம் தேதி மலேசியாவில் நடக்கிறது.

மறுநாள் அதாவது 18ம் தேதி இசை திருவிழா சிங்கப்பூரில் நடக்கிறது.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஸ்டார் Starxpo கேடபுள்யூசி ஃபேஷன் மாலில் மதியம் 3 மணி முதல் இரவு 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஜூலியின் ட்வீட்டை பார்த்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


சிங்கப்பூர், மலேசியாவுக்கு ஓவியா வருவதை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் இசை திருவிழாவில் ஜூலி என்ன பாடுவார் என்ற கேள்வியையும் கேட்டுள்ளனர்.

Isai FM Music festival will be held in Malaysia and Singapore on february 17 and 18th. Big Boss fame Julie, Oviya, Suja Varunee, Raiza Wilson, Snehan will attend the festival.

Recommended