இறைவன் அருளால் மண்டபம் பாதிக்கப்பட்டுள்ளது... உளறிய அதிமுக அமைச்சர்- வீடியோ

  • 6 years ago
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாக்கப்படுள்ளது என்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக அமைச்சர்களின் பேச்சுகள் நாளுகக்கு நாள் புதுப்புது சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தீ 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து நடந்த பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்

TN Minister R.B.Udhayakumar is in limelight for his controversial speech about the Meenakshi amman temple fire accident, he says rather by god's grace temple saved he misleaded by god's grace temple is affected.

Recommended