மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?
  • 6 years ago
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் 'மதுரவீரன்' படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பிப்ரவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இது ஜல்லிக்கட்டு படம் மட்டுமல்ல அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் பேசுகிற படம் எனக் கூறியிருக்கிறார் பி.ஜி.முத்தையா.

சண்முகபாண்டியன் நடித்த முதல் படமான 'சகாப்தம்' தோல்வியடைந்ததை அடுத்து இந்தப் படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர். இப்படத்தின் 'என்ன நடக்குது நாட்டுல...' எனும் சமூக கருத்து பாடல் யூ-ட்யூபில் ஹிட் அடித்தது.


Vijayakanth's son Shanmuga pandian has acted in 'MaduraVeeran' directed by cinematographer PG Muthiah. PG Muthiah said that "This is not only the film about Jallikattu, speaks also the politics behind it." The video of Vijay has been supported Jallikattu protest will also be in the film.
Recommended