அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்தில் இருந்து காலை 9.53 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது.
அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இன்று அதன் உச்சபட்ச தெலைவான 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக அக்னி 5 ஏவுகணை கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது. அக்னி ஏவுகணை இதற்கு முன்பு 4 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.
India successfully tested the Agni-5 missile capable of carrying nuclear weapons. The Agni-5 missile was tested at 9.53 am from Abdul Kalam Island Security Test Center on Odisha coast. The Agni-5 missile successfully tested successfully with nuclear weapons. This powerful missile, which has a very long way of flying and has a number of highlights.