சென்னை சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு எங்கு புறப்படும் ?- வீடியோ

  • 6 years ago
பொங்கல் பண்டிகையொட்டி ஊருக்கு செல்லும் மக்களின் வசதியை கருத்தில்கொண்டும், கூட்ட நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டும் புதிதாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ம் தேதி வரை, பயணிகள் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என, அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பண்டிகைக்காலங்கள் என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த பயணங்கள் அவர்களுக்கு இன்பமாக அமைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் வரும்.

சென்னையில் வசிக்கும் பாதி பேர் வெளியூர் காரர்கள் என்பதால், பண்டிக்கை காலங்களில் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வழக்கம். அலுவலக விடுமுறை, பள்ளி விடுமுறை என்று அனைவரும் ஒன்றாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கிளம்புவதால் சென்னை அந்த நேரத்தில் ஸ்தம்பிப்பது வழக்கம்.

Temporary Bus stands formed Pongal for festival Native travels. To avoid rush and accidents this new format is been introduced before one year.

Recommended