விக்ரமின் ஸ்கெட்ச் பொங்கல் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • 6 years ago
இந்த பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் விளம்பரம், வியாபாரம், அதிக அரங்குகள் என அனைத்திலும் முதலிடத்தில் உள்ளது கலைப்புலி தாணு வெளியிடும் விக்ரமின் ஸ்கெட். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். ஸ்ரீப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த கமர்ஷியல் ஆக்ஷன் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாளை வெளியாகும் ஸ்கெட்ச் படத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்துக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் ஸ்கெட்ச் படம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழ் சமூகத்துக்கு ஜனவரி 14-ம் தேதி பொங்கல். அதை இரு தினங்கள் முன்பாகவே கோலாகலமாக தொடங்கி வைக்க நாளை ரிலீசாகிறது ஸ்கெட்ச் படம்.


Vikram's new movie sketch is being slated for release on pongal. His fans are eagerly waiting to see this new movie. It is one of the most anticipated release of this year.

Recommended