மலேசியாவில் மேலும் ஒரு நடிகர் படுகாயம்!!!

  • 6 years ago
மலேசியாவில் நடந்த நட்சத்திர கால்பந்தாட்ட போட்டியில் விளையாடிய மேலும் ஒரு நடிகரும் காயம் அடைந்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள். மேலும் பிரபலங்கள் கலந்து கொண்ட கால்பந்தாட்ட போட்டி, கிரிக்கெட் போட்டியும் நடந்தது. கால்பந்தாட்ட போட்டியின்போது நடிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.

கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய முருகா புகழ் நடிகர் அசோக் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயம் ஏற்பட்ட தனது காலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அசோக் குமார். அவரது கணுக்கால் இடத்தில் ஓவராக வீங்கியிருப்பதை பார்த்தாலே பரிதாபமாக உள்ளது.

என் கால் பற்றி கேட்கும் நண்பர்களே, நான் நலமாக உள்ளேன். உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி. உங்கள் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைவேன் என்று ட்வீட்டியுள்ளார் அசோக் குமார்.

Muruga fame Ashok Kumar got hurt himself while participated in the football game that was conducted as part of Natchathira Kalai Vizha in Malaysia. It is noted that actor Aari was also injured during the match.

Recommended