Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
உத்தரபிரதேசத்தில் இருக்கும் மதராஸாக்களில் ரம்ஜானுக்கு அளிக்கப்படும் விடுமுறை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலாக இந்து பண்டிகைக்கு விடுமுறை அளிக்கும்படி சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றது. இஸ்லாமிய மக்களை புண்படுத்தும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது உத்தர பிரதேச மாநிலத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்லாமிய பள்ளிக்கூடமான மதராஸாக்களில் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு நாள் விடுமுறை என்று அறிவிக்கப்படும். இந்த முறை உத்தர பிரதேச அரசு விடுமுறை நாட்களுடன் சேர்ந்த மதராஸாக்களின் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதில் மதராஸா காலண்டரில் ரம்ஜான் விடுமுறை நீக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரம்ஜான் விடுமுறைக்கு பதிலாக தசரா, தீபாவளி, மஹாநவமி, ரக்ஷா பந்தன், புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் இருக்கும் 92 அரசு விடுமுறைகள் 86 விடுமுறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் ரம்ஜான் இல்லாத காரணத்தால் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மதராஸா குழுக்கள் ''ரம்ஜான் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். முக்கியமாக மதராஸாவில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் இதை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதுபோன்ற தினத்தின் விடுமுறையை நீக்குவது மிகவும் தவறான செயல் ஆகும். எங்கள் மனதை புண்படுத்தும் விஷயமாகும் இது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Yogi cuts Ramzan Holidays in UP. Instead of that he gives leave for Hindu festivals in Madarsas. Hindu festival like Mahanavmi, Raksha Bandhan, Dussehra, Diwali, Buddh Purnima and Mahavir Jayanti will get leave here after.

Category

🗞
News

Recommended