Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/26/2017
ஆடிட்டர் குருமூர்த்தி தடித்த வார்த்தை ஒன்று கூறினால் நாங்கள் 100 சொல்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவருமே ஆண்மையோடுதான் இருக்கிறோம் என்றும் குருமூர்த்திக்குத்தான் அது இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்த தெரிவித்துள்ளார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த டிவிட்டுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார். அதிமுகவின் சிறு தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் காங்கேயம் காளைகள் போல இருக்கிறோம். அதிமுகவை கட்டிக்காத்து வருகிறோம். ஆண்மையில்லாதவர்கள்தான் மற்றவர்களைப் பார்த்து அது இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆடிட்டர் குரு மூர்த்திக்கு அது இருக்கிறதா என்று முதலில் செக் செய்ய வேண்டும்.

குருமூர்த்தி தடித்த வார்த்தை ஒன்றை கூறினால் நாங்கள் 100 வார்த்தைகள் கூறுவோம். அதிமுகவினர் கொதித்து எழுந்தால் அதை தாங்க மாட்டார். அவர் பாஜகவில் என்னவாக இருக்கிறார் என்று தெரியாது. அவரதுஅறிவுரையை யாரும் கேட்கவில்லை என்றும் கூறினார். படிக்காதவர்கள் கூட பொறுமையாக யோசித்து பேசுவார்கள். ஆனால் குருமூர்த்தி படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.





Tamil Nadu minister D Jayakumar has warned Auditor S Gurumurthy for his comment on CM and DCM. He has asked the Auditor to check his 'Potency' first and then come to criticize the others.

Category

🗞
News

Recommended