தினகரனுக்கு "விசிலடித்த" மக்கள்- வீடியோ

  • 6 years ago
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். கடந்த 21-ஆம் தேதி ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வியுடன் இனிதே நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் அதிமுக 4,521 வாக்குகளும், திமுக 2,383 வாக்குகளும், தினகரன் 1891 வாக்குகளும் பெற்றுள்ளனர். கலைகோட்டுதயம் 258 வாக்குகளையும் பாஜகவின் கரு நாகராஜன் 66 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர்.

இதில் டிடிவி தினகரன் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுகவினர் ரகளை ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை சற்று நேரம் நிறுத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கள நிலவரம் தொடர்ந்து தினகரனுக்கு சாதகமாகவே இருப்பதால் தினகரனின் அடையாறு வீடு முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Dinakaran's supporters are celebrating the moment in his house and poll counting centre.

Recommended