ரஜினி, தமிழருவி மணியனின் திடீர் சந்திப்பு ஏன்?- வீடியோ

  • 6 years ago
ரஜினியின் அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது, அவர் இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து கூறி வருகிறார் காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன். இந்நிலையில் இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து அவர் பேசியுள்ளது மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பி விட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். ரசிகர்களுடனான சந்திப்பின் இறுதி நாளில் நாட்டில் நல்ல பல தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார்.

போருக்குத் தயாராக இருங்கள், போர் வரும் போது சொல்கிறேன் என்று தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஒரு தீப்பொறியை பற்ற வைத்துவிட்டுப் போனார். இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் உலவின.

கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று நவம்பர் 12ம் தேதி காலை முதலே ரசிகர்கள் போயஸ் கார்டனில் கிடையாய் கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதிகாலையிலேயே போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு போனவர் ரசிகர்களை சந்திக்கவே இல்லை.





While Rajini is going to meet his fans from December 26 again he holds meeting with Tamizharuvi Maniyan, will this time Rajini puts fullstop for 20 years long political entry debates.

Recommended