Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/20/2017
மாணவியை பாராட்ட நினைத்து அவரை நீண்ட நேரம் கட்டிப் பிடித்த மாணவனை கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புரிந்த சாதனையை பாராட்ட நினைத்தார். இதையடுத்து அந்த மாணவியை அவர் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளை கூறிக் கொண்டார். எனினும் மாணவியை காம நோக்கத்துடன் நீண்ட நேரம் மாணவன் கட்டிப்பிடித்ததாக புகார் கூறிய பள்ளி நிர்வாகம் அவரை கடந்த ஜூலை மாதம் முதல் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது.5 மாதங்களுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும் அபாயம் அந்த மாணவனுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தை நாட மாணவனின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் மாணவியையும் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் இரு மாணவர்களையும் பள்ளியில் மீண்டும் சேர்த்து கொள்ள உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, ஒழுங்கீன செயல்கள் தொடர்பான விவகாரத்தில் பள்ளி எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், பாராட்டு தெரிவிப்பதற்காக மாணவியை கட்டிப் பிடித்த மாணவன் நீண்ட நேரம் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் வினாடிக் கணக்கில் நடக்க வேண்டிய விஷயத்தை 5 நிமிடங்களுக்கு செய்தான். அங்கிருந்த ஆசிரியை ஒருவர் திட்டியதும் இருவரும் விலகினர். இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மாணவன் வெளியிட்டுள்ளதை ஏற்க இயலாது என்றார்.



Category

🗞
News

Recommended