பெரியபாண்டி மரணம் சர்ச்சையை கிளப்பும் கேள்விகள்- வீடியோ

  • 6 years ago
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு முடிச்சுகள் இன்றும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. கொளத்தூரில் நடைபெற்ற நகை திருட்டுக்கு ஏன் மதுரவாயில் காவல் ஆய்வாளரை குற்றவாளிகளை பிடிக்க அனுப்ப வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

கொளத்தூர் லட்சுமிபுரத்தில் நகை கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 5 போலீசார் இடம்பெற்றிருந்தனர். அதில் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகரும் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ராஜஸ்தானில் பதுங்கியுள்ள கொள்ளையர்களை பிடிக்க சென்றனர். அப்போது கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். பெரிய பாண்டியுடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகரும் இரண்டு போலீசாரும் காயம் அடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பெரிய பாண்டியின் உடல் பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியில் இருந்து வெளிவந்தது என்று ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மரணமடைந்த பெரியபாண்டியின் இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது. கொள்ளை சம்பவம் நடந்தது கொளத்தூர் பகுதியில் அப்படி இருக்க ஏன் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரை தனிப்படையில் இணைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே கொள்ளையனை பிடிப்பதில் சென்னை நகரில் பல இன்ஸ்பெக்டர்கள் வல்லமையுடையவர்கள் இருந்த போதும் ஏன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரை தனிப்படையில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெரும்பாலும் கொள்ளை வழக்குகள் என்று பதிவு செய்யப்படால் அது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தான் கொள்ளையர்களை பிடிக்க செல்வார்கள். அவர்களுக்கு துணையாக இருக்க சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் உடன் செல்ல அனுமதிப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் ஏன் ஒரு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கூட இடம்பெற வில்லை என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

Recommended