மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் அடக்குமுறை, பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
1882ஆம் ஆண்டு எட்டயப்புரத்தில் பிறந்த அந்த மகா கவிஞனின் 135வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமு முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை அவரின் கவிதைகளோடு பகிர்ந்து வருகின்றனர்.
பார்' எங்கிளும் கவிதையினால் 'அதி'சயம் செய்து, 'யார்' இவர் என அனைவரையும் வியக்க வைத்த- #பாரதியார் பிறந்த தினம் இன்று
இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாள்.. தமிழன் ஒவ்வொரும் பெருமை கொள்ளும் நாள்... தமிழண்டா
தமிழுக்கு எத்தனை பேர் பெருமை சேர்த்தாலும் ஆனால் பாரதி எழுதிய பாடல்கள் மற்றும் நாவல்கள் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நம்ம பாட்டன் பாரதியார் தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா