Skip to playerSkip to main content
  • 8 years ago
அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வருகிறார் பெய்லி செல்லர்ஸ். இவரது தந்தை மைக்கேல் செல்லர்ஸ் கடந்த நான்கு வருடமாக பெய்லிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வருகிறார்.
ஆனால் மைக்கேல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார். மேலும் பெய்லிக்கு சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது 21வது பிறந்த நாள் கொண்டாடிய அந்த பெண்ணுக்கு அதேபோல் வாழ்த்து செய்து வந்து இருக்கிறது. தற்போது வந்த அந்த வாழ்த்து செய்திதான் இறந்த அப்பாவின் கடைசி பிறந்த வாழ்த்து செய்தி என்று அந்த பூங்கொத்தில் எழுதி இருக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வந்தார் மைக்கேல் செல்லர்ஸ். 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள் திடீர் என்று அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆறு மாதத்திற்குள் எப்படியும் மரணம் அடைந்துவிடுவார் என்று அவருக்கு நாள் குறிக்கப்பட்டது. அதையடுத்து அடுத்த ஆறு மாதத்தை அவர் மிகவும் சோகமயமாக கழித்து இருக்கிறார். இந்த நிலையில் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்துள்ளார்.

Category

🗞
News

Recommended