குஜராத்தில் வீதி வீதியாக சென்று தீயாக பிரச்சாரம் செய்த நக்மா- வீடியோ

  • 6 years ago
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா பிரச்சாரம் செய்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்தது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா பிரச்சாரம் செய்துள்ளார்.
வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ளார். மேலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசியுள்ளார். நக்மா தான் தீயாக பிரச்சாரம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மோடியின் மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய அரசையும், மோடியையும் ராகுல் நறுக் நறுக்கென்று கேள்வி கேட்டு வருகிறார். மோடிஜி மோடிஜியை பற்றி மட்டுமே பேசுவார் ஏன் அவருக்கு வேறு எதை பற்றியும் பேச முடியாது என தெரிவித்துள்ளார் ராகுல்.


Actor cum Congress functionary Nagma campaigns in Gujarat for her party canditates. Gujarat assembly election is being held in two phases. Voting for the first phase was held on last saturday.

Recommended