Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
தன்னை கெட்ட வார்த்தையால் திட்டியவருக்கு கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம், தனது மனைவி நிஷாவுடன் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அவர்கள் தங்களின் 2வது திருமண நாளை கொண்டாடினார்கள். இந்நிலையில் நிஷா பிரான்ஸில் எடுத்த புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக், ட்விட்டரில் வெளியிட்டார்.
நிஷா ஆசை ஆசையாய் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அழகு, க்யூட், செம என்று கமெண்ட் போட்டனர். மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு மீண்டும் வருமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.
நிஷாவின் புகைப்படத்தை பார்த்த ஒருவர் அவரை தே...மு... என்ற கெட்ட வார்த்தையால் திட்டினார். இதை பார்த்த நிஷா நான் உங்க அம்மாவின் பெயரை கேட்கவில்லை என்று நெத்தியில் அடித்தது போன்று பதில் அளித்தார்.
இது போன்றவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை. மீடியாவில் வேலை செய்வது பிற வேலைகளை போன்றது தான். நீங்கள் கம்ப்யூட்டர் முன்பு வேலை பார்க்கிறீர்கள் நான் கேமரா முன்பு பார்க்கிறேன். அவ்வளவு தான்!! மீடியாவில் வேலை செய்யும் பெண்களை ஏன் திட்டுகிறார்கள்? கமெண்ட்டை நீக்குவதற்கு பதில் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன் என்று நிஷா தெரிவித்துள்ளார்.

Category

People

Recommended