Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை கிடைத்தவுடன் இணைந்து விட்டதாகவும் மதுசூதனனை வெற்றியடைய செய்வோம் என்றும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அந்த அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் மனங்கள் இணையவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை கூறியபோது இது எனது சொந்த கருத்து இல்லை, ஒட்டுமொத்த தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றார்.

Maithreyan MP says for a TV channel that the hearts are merged after recovering twin leaves. Few days ago he says that ADMK factions are merged but not their hearts

Category

🗞
News

Recommended