தவான் பாவம் விட்டுடுங்க.. இப்படியா பண்ணுவாங்க... சேவாக் செய்த குறும்பு!- வீடியோ

  • 7 years ago
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு சேவாக் மிகவும் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவரது வாழ்த்து டிவிட்டர் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.
நேற்று தவானுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் இந்த சேவாக்கின் வாழ்த்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த டிவிட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் காமெடியாக கமெண்ட் செய்து இருந்தனர்.
சிலர் அதை வைத்து சேவாக்கையே கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். சேவாக்கின் வித்தியாசமான புகைப்படங்களை சிலர் பகிர்ந்து இருந்தனர்.இந்திய கிரிக்கெட் வீரர் தவான் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று அவர் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருந்ததால் அவருக்கு கூறப்பட்ட வாழ்த்து எதற்கும் பதில் அளிக்கவில்லை. அவர் நேற்று சிறப்பாக விளையாடி 67 ரன்கள் எடுத்தார். பிறந்த நாளில் மிகவும் நன்றாக விளையாடியதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிலையில் சேவாக், தவானுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் "பிறந்த நாள் வாழ்த்துகள் ஷிகா. நீங்கள் எந்த மோசமான சூழ்நிலையிலும் இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வருவீர்கள். பல வெற்றிக்கு முக்கிய அடித்தளம் இட்டு இருக்கிறீர்கள்.' என்று மிகவும் பாராட்டி உள்ளார். ஆனால் அதே சமயம் அவரைப் போலவே இருக்கும் வேறு ஒரு நபரின் புகைப்படத்தை போட்டு காமெடியும் செய்துள்ளார்.



Sehwag trolls Dhawan on his Birthday in Twitter by posting a pic. He uses a person's pic who looks same like Dhawan.

Recommended