பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டிய நாகராஜ்... பாபநாசம் பாணியில் கொன்ற காமராஜ்- வீடியோ

  • 7 years ago
பாபநாசம் சினிமா பாணியில் இளம்பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்து அவரை ஆசைக்கு இணங்க அழைத்த நபரை அந்த பெண்ணின் கணவன் கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் ஹைகூல் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ்,42 தறிப்பட்டறை தொழிலாளி. தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண் குளித்தபோது அதனை படம் எடுத்து அவரை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

நாகராஜின் நடவடிக்கையைப் பற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்தார் காமராஜ். அனைவரும் சேர்ந்து நாகராஜை தாக்கியுள்ளனர். அதே நாளில் டாஸ்மாக் கடைக்கு காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மதுகுடிக்க சென்றபோது நாகராஜூம் அங்கு வந்துள்ளார்.

அவரை கண்டதும் ஆத்திரம் அடைந்த காமராஜ், நண்பர்களுடன் சென்று நாகராஜை மீண்டும் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக நாகராஜ் மனைவி ஜமுனா, அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், இவரது உறவினர் மோகன்ராஜ் மற்றும் நண்பர்கள் காந்திபுரம் பகுதியை சேர்ந்த காட்டூர் தினேஷ் குமார், குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீனாட்சி சுந்தரம், அதே பகுதியை சேர்ந்த ஜீவா ஆகியோரை கைது செய்தனர்.

Recommended