ஜனவரியில் ரஜினி அரசியல் என்ட்ரி-அண்ணன் சத்திய நாராயண ராவ்!- வீடியோ

  • 7 years ago
ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சித் தொடங்குகிறார் என்று எப்பவோ நமது ஒன் இந்தியா தமிழ் தளம் கூறியதை தற்போது அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் உறுதிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தை கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வந்தனர். எனினும் ரஜினி பிடிகொடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் போர் வரும் போது பார்ப்போம் என்றும் தெரிவித்தார். இது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் மும்முரமாக இறங்கி வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியிருந்தார். எனினும் இதை ரஜினி மறுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்து கிடக்கின்றனர்.

கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த் தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை பேசினார். இதனால் அப்போது அரசியல் களம் சூடுபிடித்தது. இதையடுத்து மீதமுள்ள மாவட்ட ரசிகர்களை சந்திக்கும்போது அவர் கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rajinikanth's brother Satya Narayana Rao says that Rajini will start his political party in January.

Recommended