அடையாறு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்- வீடியோ

  • 7 years ago
சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாறு முகத்துவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. காலையில் இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து உள்ளனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து தற்போது அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர். ஆய்வில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள் கழிவு நீர் அதிகமாகி ஆக்சிஜன் வாயு குறைபாடு காரணமாக,சுவாசிக்க முடியாததால் இறந்துள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோல நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடற்கரையில் 15க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Large Number of fishes secluded near Adayar Estuary gives Shock to local people.

Recommended