Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. லீக் ஆட்டம், அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 248 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் இக்ரம் பைசி அவுட்டாகாமல் 107 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார்.

பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஆப்கானிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22.1 ஓவர்களே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 63 ரன்னில் சுருண்டது.
இதனால் ஆப்கானிஸ்தான் 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிது. 7.1 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முஜீப் சர்தான் ஆட்ட் நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தானின் 9 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டவில்லை.

Riding on Ikram Ali's unbeaten 107, Afghanistan registered a stunning 185-run victory over Pakistan to clinch the Under-19 Asia Cup for the first time at the Kinrara Academy Oval in Kuala Lumpur on Sunday.
Afghanistan posted 248 for 7.

Category

🥇
Sports

Recommended