Skip to playerSkip to main content
  • 8 years ago
தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்குள் நடிகர்களை பொருத்தி படமெடுப்பதில் தனித்துவம் மிக்க இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பாலா. பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது படம் மட்டுமே அனைத்து பிரிவினருக்கும் லாபத்தை கொடுத்த படம். சூர்யா, விக்ரம் - சூர்யா, ஆர்யா, விஷால் - ஆர்யா, அதர்வா, இயக்குனர்சசிக்குமார் என முன்ணணி நடிகர்கள் நடித்து பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் இவருக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும்பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கிறது. பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வரும் கெட்ட வார்த்தைக்கு சமூக வலைதளங்களில் கண்டன பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இது சம்பந்தமாக மாதர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என்ற துணை கேள்வியும் வலைதள வாசிகளால் எழுப்பபட்டுள்ளது.

All India Democratic Women Association has condemned Bala's Naachiyaar teaser
Comments

Recommended