Skip to playerSkip to main content
  • 8 years ago
நடிகர் கமல்ஹாசன் ஒரு கோழை அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன் தினம் இந்துதீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் சிறுவன் ஒருவன் கமல்ஹாசனின் படத்தை பின்னால் இருந்து ஒருவர் சொல்ல அதனை கேட்டு கமலின் படத்தை கத்தியால் குத்தி கிழிப்பது போல அந்த வீடியோ பதிவு இருந்தது.

இதனைத் தொடர்ந்து கமல் பதிவிட்டிருந்த கருத்தில் என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என்று கூறி இருந்தார்.

BJP national secretary H. Raja criticise that actor Kamalhaasan has no guts to face a problem arise at the time of Vishwaroopam release and also calls him as a coward

Category

🗞
News

Recommended