Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தனது காதலை ஏற்க மறுத்ததோடு குடும்பத்துடன் கேவலமாக பேசியதால் எரித்து கொன்று விட்டதாக இந்துஜாவை கொலை செய்த ஆகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள்கள் இந்துஜா, நிவேதா, மகன் மனோஜ். இந்துஜா பட்டதாரி பெண்.

இவரை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் காதலித்தார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இந்த காதலை இந்துஜாவின் பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தினார்கள். இதனால் மனம் மாறிய இந்துஜா ஆகாஷ் உடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம்
ஆகாஷ் விடுவதாக இல்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். வேலைக்கு செல்லும் போதும் ஆகாஷ் தொந்தரவு செய்யவே, எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார். நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்றார்.

Akash has given a shocking statement on his killing of lover Induja

Category

🗞
News

Recommended