ஏர்போர்ட்டில் பயணியை அடித்து குரல்வளையை நெறித்த இன்டிகோ ஊழியர்கள்: அதிர்ச்சி வீடியோ

  • 7 years ago
டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெறிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.

A video of ground staff of IndiGo Airlines manhandling a 53-year-old passenger at Indira Gandhi International (IGI) Airport has gone viral.

Recommended