பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற மனைவி- வீடியோ

  • 7 years ago
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு ஆசியா பீபி என்ற பெண்ணுக்கு கட்டாய திருமண செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. இவர் பல நாட்களாக அவரது கணவனுடன் வாழ பிடிக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவருக்கு வேறு ஒரு காதல் இருந்ததால் அவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டு பாலில் விஷம் கலந்து இருக்கிறார். ஆனால் அந்த பாலை அவரை தவிர வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து நபர்கள்களும் குடித்துள்ளனர். இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் எப்படியெல்லாம் கொலை செய்ய திட்டமிட்டார் என்பதை மிகவும் வித்தியாசமாக போலீசிடம் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்.பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அங்கு வழக்கம் ஆகி இருக்கிறது. தற்போது இதே போன்றதொரு சம்பவம் பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து இருக்கிறது. பஞ்சாப்பில் வசித்து வந்து ஆசியா பீபி என்ற 21 வயது பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் அஜ்மத் அக்ரம் என்ற 25 வயது ஆணை கட்டாயமாக திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். இந்த திருமணம் தற்போது பெரிய பிரச்சனையில் முடிந்து இருக்கிறது.

bride allegedly finished 17 relatives with milk. Aasia Bibi was married to a relative against her will in September in a village in the Punjab.

Recommended