Skip to playerSkip to main content
  • 8 years ago
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பவுலிங் செய்ய ஓடிவரும்போதே, இவர் என்ன ஓட்டப் பந்தயத்திலா கலந்து கொள்கிறார் என்று கேட்கும் அளவுக்கு அவருடைய வேகம் இருக்கும். அதைவிட வேகமாக அவருடைய கையில் இருந்து பந்து வரும். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளையும் மிரள வைத்த லசித் மலிங்காவின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளது. இந்தியாவுடனான தொடருக்குப் பிறகு, அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை.

வேகம் போதவில்லை என்று, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு அவரை பரிசீலிக்கவில்லை. சரி சும்மா இருந்தால், சமாதி கட்டிவிடுவார்கள் என்று, உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார் மலிங்கா.

உள்ளூர் போட்டியில், டிஜே லங்கா அணிக்காக நடந்த போட்டியின் போது, போதிய வெளிச்சம் இல்லாததால், சீக்கிரம் முடிக்க அம்பயர்கள் உத்தரவிட்டனர். மலிங்கா பவுண்டரி வரை சென்று ஓடிவந்து பந்து வீசுவதற்கு தாமதம் ஆகும் என்பதால், ஆப்-ஸ்பின் செய்தார்.

Srilankan pace bowler Lasith Malinga bowled spin and took wicket

Category

🥇
Sports

Recommended