வீட்டில் ஆள் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள்ளேயே டெலிவரி..அமோசன் அதிரடி-வீடியோ

  • 7 years ago
அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வித்தியாசமான முறையில் வீட்டுக்குளேயே சென்று டெலிவரி செய்யும் வசதியை ஏற்படுத்த இருக்கிறது. இதன் மூலம் அனைத்து பார்சல்களையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.இதற்காக புதிய தொழிநுட்பம் ஒன்றை உருவாக்கும் முடிவில் இறங்கி இருக்கிறது அமேஸான் நிறுவனம்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்டர்களை பெறவேண்டும் என்றால் அதிக செலவு ஆகும் என்றும் கூறியிருக்கிறது. மேலும் இந்த தொழிநுட்பம் அனைவருக்கும் அளிக்கப்படாது அமேசானில் இருக்கும் பிரைம் கஸ்டமர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.பொதுவாக அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில் ஆர்டர் செய்பவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள்

. ஆர்டர் செய்த பொருள் எப்போது வீட்டுக்கு வரும் , சரியான தேதியில் வந்துவிடுமா என நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி பையனுக்காக காத்திருப்பது மிக கஷ்டமான செயலாகும்.

Amazon to launch service that will allow them to deliver whatever you order, inside your own house even when you are not even there. In order to avail this service you have to be Amazon prime customer.

Recommended