Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் போலி மருத்துவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரமின்றி இருக்கும் இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனைசெய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் மருத்துவர்கள் குறித்த சோதனையில் ஈடுபட்ட போது போலி மருத்துவர்கள் 4பேர் பிடிபட்டனர். அதேபோல் திருப்பூரில் போலி மருத்துவர் ஒருவரை சுகாதாரத்துறை அதிகார்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். ஒரே நாளில் தமிழகத்தில் போலிமருத்துவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Health Department Officers checking all the Districts and 5 Fake Doctors are arrested .

Category

🗞
News

Recommended