சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் இந்த அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் அனைவரும் ஆறு மற்றும் கடல்களில் புனித நீராடுவர்.