* "தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின்! தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றின்! மாபெரும் திருப்பு முனையான எல்லாளன் சிறப்புப் படை நடவடிக்கை"...!!!
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலிகளின் 08 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்று"...!!! - 22/10/2015
* "தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின்! தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றின்! மாபெரும் திருப்பு முனையான எல்லாளன் சிறப்புப் படை நடவடிக்கையின் எட்டாம் ஆண்டு விரவணக்க நினைவுகள்"...!
[22-10-2007 -> 22-10-2015]
எல்லாளன் சிறப்புப் படை நடவடிக்கையில் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன், மற்றும் கப்டன் தர்மினி, கப்டன் ஈழப்பிரியா, கப்டன் அருள்மலர் உட்பட்ட 21 சிறப்புக் கரும்புலிகளின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
எம் தானைத் தலைவன்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கும்! உலக இராணுவ வல்லுனர்களும்! காட்டிய எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Écris le tout premier commentaire