* "இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்"...!
* "எமது தமிழீழப் போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்"...!
* "கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்"...!
* "எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும்! அறிஞர்களும்! அந்நியப்பட்டு நிற்கமுடியாது"...!
* "தமிழீழ விடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்"...!
* "எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்"...!
Écris le tout premier commentaire