* "தீயினில் எரியாத எம் தீபங்களே! எங்கள் தமிழ் ஈழ தேசத்தில் உருவான முத்துக்களே"...!!!
- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் மூத்த தளபதிகளான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்று"...!!! - 05-10-2015
[05, ஒக்ரோபர் 1987 -> 05, ஒக்ரோபர் 2015]
* "நினைவுக்குள் நிறைந்து இருபத்திஎட்டு ஆண்டுகள் இன்று"...!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் இருபத்திஎட்டாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, கப்டன் மிரேஸ், கப்டன் நளன், லெப்.அன்பழகன், லெப்.தவக்குமார், லெப்.ரெஜினோல்ட், இரண்டாம் லெப்.ஆனந்தகுமார் ஆகிய பன்னிரு தமிழீழ விடுதலைப் புலி வேங்கைகள் இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார முகத்திரையை கிழித்தபடியே வீரச்சாவடைந்தனர்.
சுதந்திர தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைக்காய் தரையிலும் - கடலிலும் - வானிலும் தம்மை அர்ப்பணித்து தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப் புனிதவதிகளை...புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.
தமிழ் ஈழத் தாய் மண்ணை எதிரிகளின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காய் (விடிவிப்பதற்காய்) தரையிலும் - கடலிலும் - வானிலும் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஈகம் செய்து விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி தலைசாய்த்து [சிரம் தாழ்த்தி] எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Écris le tout premier commentaire