தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்படுவதால் சுங்கக் கட்டணம் கணிசமாகக் குறையப் போகிறது.