Skip to playerSkip to main content
  • 3 years ago
"அண்ணாமலையின் அறிவுறுத்தலின் படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறது. வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், என்னை மன்னிக்கவும், நான் பயப்படவில்லை" என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், "நீங்கள் என்னைப் பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும், எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்து கொள்கிறேன்" என கூறியுள்ளார். இதனிடையே, தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிடும் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது ஆன்லைன் மூலம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended