தனி ஆளாக 9 பேரை காப்பாற்றிய மீனவர்; குவியும் பாராட்டுகள்!

  • 2 years ago
ஆறுமுகநேரி அருகிலுள்ள அடைக்கலாபுரம் சார்ந்த பக்தர்கள் வந்துள்ளனர் உப்பாற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர் அப்போது அலை சீற்றம் அதிகமாக இருந்ததால் 9 பக்தர்கள் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதியில் பக்தர்கள் போட்ட கூச்சல் யாருக்கும் கேட்கவில்லை. இதற்கிடையே அந்தப் பகுதிக்கு தற்செயலாக மீன் பிடிக்க சென்ற புன்னக்காயல் ரஷ்யா தெருவை சேர்ந்த ஜெர்ஜுஷ் கொறைரா மகன் ஜேமன் வயது( 37) என்பவர் 9 நபரை தனது படகில் ஏற்றி பத்திரமாக மீட்டு அதன் பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர் . உயிர் பிழைத்த பக்தர்கள் கொடுத்த பணத்தை ஜேமன் வாங்க மறுத்தனர் ஆற்றில் மூழ்கிய 9 நபரை தனி ஒருவராக தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடி மீட்டு காப்பாற்றிய ஜேமனின் வீரசெயலை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை பாராட்டினார்கள்.

Recommended