திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா அசத்தல்; பெற்றோர்கள் பங்கேற்பு!

  • 2 years ago
தனது 16 வயதில் இருந்தே தனது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் தான் திருநங்கையாக மாறவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் நிஷா கூறினார். இந்த நிலையில் நிஷா விடுதியில் தங்கிக்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வரை படித்தார். பின்னர் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருநங்கையாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நிஷாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடம் முடிந்த பிறகு திருநங்கைகள் சேர்ந்து சடங்கு செய்வது வழக்கம், ஆனால் நிஷாவின் பெற்றோர் பெண்களுக்கு செய்யும் மஞ்சள் நீராட்டுவிழா போல் நிஷாவிற்கு அலங்காரம் செய்து கொண்டாடினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

Recommended