சாப்பிடும் கேப்பில் திருட்டு; ஷாக்கான அதிமுக முன்னாள் எம் எல் ஏ!

  • 2 years ago
திருப்பூர் மாவட்டம் சந்திராபுரம் பி.ஆர்.ஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் திருநெல்வேலி ஆலங்குளம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இவரது மனைவி சாவித்திரி இவர்கள் திருப்பூரில் பேப்ரிகேஷன் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். திருப்பூரில் இருந்து காரில் கோவை வந்தனர் பின்னர் இருவரும் திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர்.சிறிது நேரம் கழித்து மீண்டும் காரை எடுக்க வந்தனர்
அப்போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேக்கை காணவில்லை பேக்கினுல் 12 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கின்றது.